/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சாரதாதேவியார்
/
தெரிந்ததை சொல்லிக் கொடுங்கள்
/
தெரிந்ததை சொல்லிக் கொடுங்கள்
ADDED : ஆக 09, 2008 09:38 AM

<P>நல்ல விஷயங்களைச் சொல்லும் போது கேட்பவருக்கும் தகுதி வேண்டும். தகுதி இல்லாதவனிடத் தில் நல்ல விஷயங்களைச் சொன் னாலும் பயனேதும் விளையாது. உலகியல் இன்பத்தின் மீதானஆசை, புறவுலக இன்பத்தையும், பந்ததத்தையும் தூண்டி விடுவதாக இருக்கும். வைராக்கியத்தின் (பக்தி) மீது வைக்கும் ஆசை நம்மை கட்டுக்களிலிருந்து விடுவிக் கும். உங்களுடைய துன்பங்களைக் கண்ணீருடன் இறைவனிடம் எடுத்துச் சொல்லுங்கள். மனச்சுமையை அவர்முன் இறக்கி வையுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை நிச்சயம் அவர் நிறைவேற்றி வைப்பார். இந்த உலகம் இறைவனுடையது. அவரது கையில் நாம் வெறும் பொம்மைகளே. அவர் நம்மை எப்படி வைத்தாலும், எங்கு வைத்தாலும் அதை நாம் திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். விவேகமும், வைராக்கியமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயமாக இருக்க வேண்டியவை. இவை இருந்தால் தான் இல்லறமும் சோபிக்கும். துறவறமும் சோபிக்கும். தானங்களில் சிறந்ததாக இருப்பது ஞானதானமே. தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு வழங்கிடும் மகத்தான பண்பினை எல்லோரும் பெற வேண்டும்.</P>